(செ.தேன்மொழி)

தும்மலசூரிய - உடபத்தேவ பிரதேச செயலகத்தின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபத்தேவ பிரதேச செயலகத்தின் அருகில் நேற்று செவ்வாய் கிழமை கைக்குண்டொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அவை மீட்கப்பட்டுள்ளன. 

பிரதேச செயலகத்தின் சிற்றூழியர் ஒருவர் பிரதேச வளாகத்தை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது சந்தேகத்திற் கிடமான பொதியொன்று காணப்படுவதாக அருகிலிருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளார். பின் இது தொடர்பில் பொலி ஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கைக்குண்டு மீட்கப்பட்டதாக தும்மலசூரிய பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் கைக்குண்டை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவர்கள் கைக்குண்டை செயழிலக்கச் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைக்குண்டை யாராவது இப்பகுதியில் விட்டுச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்ட தும்மலசூரிய பொலிஸார் ,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.