அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் தந்தையும் இரண்டுவயது மகளும் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதை காண்பிக்கும் படம் உலகை உலுக்கியுள்ளது.

ஓஸ்கார் அல்பெர்டிரோ மார்டினஸ் என்ற நபர் ஆற்றை கடந்து மனைவியை அழைத்துவர முயன்றவேளை அப்பா செல்கிறார் என நினைத்து இரண்டுவயது குழந்தை அவரை பின்தொடர்ந்து சென்று ஆற்றில் விழுந்துள்ளது.

குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தையும் குழந்தையும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

அவர்களின் தலைகள் கருப்பு நிற  ரீ சர்டினால் போர்த்தப்பட்டு, குழந்தையின் சிறிய வலது கை தந்தையின் தோல்பட்டைக்கு மேல் போடப்பட்ட நிலையில் மகள் சிவப்பு நிற  காற்சட்டை கருப்பு காலணிகளுடன் தந்தையை இறுக்க பிடித்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இருவரும் இறந்து கிடப்பதை காண்பிக்கும் மனதை உலுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த அவலம் டிரம்பின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கையின் கொடுமையை வெளிப்படுத்துகின்றது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.மேலும் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து செல்லும் ஆபத்தான பயணத்தின் கடுமையான நினைவூட்டலாகும்.