(இராஸதுரை ஹஷான் )

நாடு  ஸ்தீரத்தன்மையற்றதற்கு  அரசியலமைப்பின் 19வது திருத்தம்  மாத்திரம் காரணமல்ல பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பான்மை கூட ஆதரவு  கிடைக்காத ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர்  ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக  நியமித்தமையே முறையற்ற அரசாங்கத்தை தோற்றுவித்தது.

இதுவே அனைத்து  பிரச்சினைகளுக்கும்  மூல காரணம். தவறுகளை திருத்திக் கொள்ள  ஜனாதிபதிக்கு  இன்னும்  காலம் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர்  காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் செயற்படாமல் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதற்கு அரசியலமைப்பின் 19வது திருத்தம்  பிரதான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தற்போது குறிப்பிட்டுள்ளமை  பல  மாறுப்பட்ட கருத்துக்களை  தோற்றுவித்துள்ளது. 

கடந்த  நான்கு வருட காலமாக  நாட்டில் ஏற்பட்ட அனைத்து  அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கும்   ஜனாதிபதியும் பொறுப்பு கூற வேண்டும்.  

அரசியல் ஸ்தீரத்தன்மை மற்றும் அரசியல் நெருக்டிகளுக்கு ஜனாதிபதி   19வது திருத்தத்தை மாத்திரம்  குற்றஞ்சாட்ட முடியாது.

பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு  பெரும்பான்மை ஆதரவு  இல்லாத   ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கியமை ஜனாதிபதி அரசியல் ரீதியில் முன்னெடுத்த முதல் தவறாகும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.