வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ  ஆண்டகைக்குமிடையிலான சந்திப்பு  நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மன்னார் மாவட்டம் தொடர்பான  பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும்,  தற்கால சூழ் நிலைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது. 

குறித்த சந்திப்பில்  ஆயருடன் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விகடர்சோசை அடிகளார், மற்றும் மறைமாவட்ட  குருக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.