(செ.தேன்மொழி)

இமதுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹவுப்பே பகுதியில் நேற்று மாத்தறை குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, பொலிஸாருடன் இணைந்து குற்ற விசாரணை பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஹவுப்பே பகுதியைச் சேரந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கி , துப்பாக்கி உதிரிப்பாகங்கள் மற்றும் 4 யானைத்தந்தங்களும் மீட்கப்பட்டன.

பொரிஸார் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன். மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.