கிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Digital Desk 3

26 Jun, 2019 | 12:51 PM
image

கிளி­நொச்சி பார­தி­புரம் பகு­தியில் இரா­ணு­ வத்தின் மருத்துவ பிரிவின் ஹன்டர் ரகவாகனம் ஒன்று யாழ். நோக்கி பய­ணித்த கடு­கதி ரயி­லுடன் மோதி­யதில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

கிளி­நொச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையில் இருந்து 7 இராணுவ வீரர்­க­ளுடன் மருத்துவப்பிரிவின் ஹன்டர்ரக வாகனம் கிளி­நொச்சி நகர் பகு­தியை நோக்கி பய­ணித்த போது,   55 ஆம் சந்தி அருகில் உள்ள ரயில் கட­வையில்,  கொழும்பில் இருந்து காங்­கே­சன்­துறை நோக்கி பய­ணித்த யாழ். தேவி ரயிலில் மோதி­யுள்­ளது.

 

ட்ரக் வண்­டி­யா­னது ரயிலில் மோதுண்­டதில் அதில் பய­ணித்த 7 வீரர்­களில் நால்வர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­துடன்  ஒருவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் உயி­ரி­ழந்­துள்ளார்கள். 

மற்றைய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிசிக்சைப் பெற்று வந்தவர்களுள் மற்றுமொரு இராணுவ சிப்பாய் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இரா­ணு­வத்தின் வைத்­திய படைப் பிரிவு கோப்ரல் பி.ஜி.ஏ.என்.சி. ஜய­சிறி, அந்த படைப் பிரிவின் வீரர்­க­ளான ட்ரக் வண்டி சாரதி எஸ்.என்.பி.கே. ஹேரத், ஆர்.எம்.எச். சஞ்­ஜீவ, , இரா­ணுவ விஷேட பாது­க­ப்பு படைப் பிரிவின் வீரர் கே.சிரி­சேன, யுத்த உப­க­ர­ணங்கள் தொடர்­பி­லான படைப் பிரிவின் வீரர் டி.எம்.எஸ்.பி. திசா­நா­யக்க ஆகி­யோரே உயி­ரி­ழந்­தவர்­க­ளாவர்.

இரா­ணுவ காலாற்­படைப் பிரிவின் வீரர் பி.டி.எச். ரொஷான் மற்றும் கஜபா படைப் பிரிவின் ஆர்.எம்.எஸ். சாமர ஆகிய  வீரர்­களே படு­கா­ய­ம­டைந்து சிகிச்சைப் பெற்று வந்தனர்.

 இரா­ணுவ ட்ரக் வண்­டியின் சாரதி ரயிலைக் காணாது, கட­வையால்  ட்ரக்கை செலுத்த முற்­பட்­ட­மையால் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ண­களில் தெரி­ய­வந்­துள்ள நிலையில்,  அங்கு இறந்த, காய­ம­டைந்த அனை­வரும் கிளி­நொச்சி இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­றி­ய­வர்கள் என தெரி­ய­வந்­துள்­ளது. 

இவர்கள் பார­தி­பு­ரத்தில் உள்ள இரா­ணுவ வைத்­திய படைப் பிரி­வுக்கு  நீர் எடுத்துச் செல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59