வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பாலமுனை கிராமத்திலுள்ள வீடொன்று தீ வைக்கப்பட்டதில் அந்த வீடும், வீட்டிலிருந்த உடமைகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, கணவனுக்கும் மனைவிக்குமிடையில் ஏற்பட்ட  வாய்த் தர்க்கத்தால் ஆத்திரமைடைந்த கணவன் தமது வீட்டுக்குத் தீயிட்டு எரித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கணவன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு தீப்பற்றி புகை மண்டலமாகத் தெரிவதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதோடு தீயை அணைப்பதற்கும் முயற்சித்துள்ளனர்.

பொலிஸாரும் தகவலறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த போதும் வீடு ஏற்கெனவே முற்றாக எரிந்துள்ளது.

எனினும் அயல் பகுதிகளுக்கும் தீ பரவாமல் பொலிஸார் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.