நத்தையால் ஸ்தம்பிதமான ரயில் சேவை

By Daya

26 Jun, 2019 | 11:18 AM
image

கடுமையான இயற்கை சீற்றங்களின்போது கூட நிற்காத புல்லட் ரயில் சேவையை, நத்தை ஒன்று  நிறுத்திய சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரெயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. நிலநடுக்கம், கன மழை போன்ற கடுமையான இயற்கை சீற்றங்களின்போது கூட அங்கு புல்லட் ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது கிடையாது.

 

ஆனால்,  கடந்த மாதம் 30 ஆம் திகதி  நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் ரயில்கள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 25 புல்லட் ரயில்களின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்நிலையில், புல்லட் ரயில் சேவை பாதிப்புக்கு ஒரு நத்தைதான் காரணமாக இருந்திருக்கிறது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணம் குறித்து புல்லட் ரயில் ஊழியர்கள் ஆராய்ந்தபோது, ரயில் பாதைக்கு தொடர்புடைய ‘எலக்ட்ரானிக்’ கருவியில் உயிரிழந்த நிலையில் நத்தை ஒன்றை மீட்டனர்.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள ”எலக்ட்ரானிக்” கருவியை கடக்க முயன்றபோது, நத்தை மீது மின்சாரம் பாய்ந்து, அதனால் மின்சாரம் தடைப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இயற்கை பேரிடர்களால் கூட நிறுத்த முடியாத ஜப்பான் புல்லட் ரயில் சேவையை ஒரு நத்தை நிறுத்திவிட்டது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப் பணி­யா­ளர்கள் உள்­ளா­டை அணி­வது கட்­டாயம்...

2022-10-05 12:26:39
news-image

கோழியின் கால் பாதங்களை உட்­கொள்­வதில் புதிய...

2022-09-30 12:57:29
news-image

சூறா­வ­ளிக்கு மத்­தியில் செய்தி வழங்­கும்­போது ஒலி­வாங்­கியை...

2022-09-30 12:36:10
news-image

கேக்கில் வடிவமைக்கப்பட்ட சுயவிபரக்கோவை

2022-09-28 12:52:07
news-image

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்...

2022-09-27 12:33:32
news-image

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கணினிப் பொறியியலாளர்

2022-09-13 13:28:24
news-image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு...

2022-09-13 11:39:02
news-image

இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை...

2022-09-08 12:34:41
news-image

உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக...

2022-09-05 13:06:29
news-image

மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட...

2022-09-02 19:31:27
news-image

யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

2022-09-01 14:12:54
news-image

ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ...

2022-08-30 16:46:56