வவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே தலைமையிலான பொலிஸார் நேற்று மாலை நெடுங்கேணி நைனாமடு வீதியில் புளியங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க முதிரை குற்றிகள் 7 மகேந்திரா கப் ரக வாகனத்தில் எடுத்துச் சென்றபோது வாகனத்தை வழிமறித்த பொலிசார் வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாக செலுத்தியுள்ளார்.
வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் சன்னாசிபரந்தன் பகுதியில் வழிமறித்த போது இருவர் தப்பித்து சென்றதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவரையும் முதிரைக் குற்றிகளையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM