அபாயா விவகாரம் : ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

Published By: Digital Desk 4

25 Jun, 2019 | 08:51 PM
image

உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை,  மீண்டும்திருத்தி வெளியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளளார். 

இச்சிக்கலைத் தீர்த்து வைக்க முகத்தை திறந்து முஸ்லிம்களின் கலாசார உடையில்  அபாயா அணிவதையும் அனுமதித்து புதிய சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்பதியுதீன்  கடிதமொன்றை  தனித்தனியாக அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். 

அக்கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: 

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின்  ஆடை தொடர்பிலான சுற்று நிருபத்தில் முஸ்லிம் பெண்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதனால் அலுவலகங்களுக்குச் செல்வதில் முஸ்லிம் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். தேசிய உடை என்ற போர்வையில் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாசார ஆடைகள் மீது கட்டுப்பாடு விதிப்பதும், இஸ்லாமிய கலாசார விடயங்களில் தேவையற்ற நெருக்குதல்களை ஏற்படுத்துவதும் சமூகங்களுக்கிடையில் வீண் விமர்சனங்களை ஏற்படுத்துவதாகவுள்ளது. 

இனங்களை மோதவிட்டு சுய இலாபங்களையும் அரசியல் முதலீடுகளயைும் அதிகரிக்கக் காத்திருக்கும் இனவாதிகளும் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை ஒரு இனத்தின் மீதான ஒடுக்கு முறையாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். 

இவ்விபரீதங்களைக் கருத்தில் கொண்டு கலாசாரங்களின் நம்பிக்கைகளில் தேவையில்லாத தலையீடுகளைத் தவிர்க்கும் வகையில் புதிய சுற்று நிருபத்தை அவசரமாக வெளியிட வேண்டும். 

மேலும், பாரம்பரியமாக இலங்கை முஸ்லிம் பெண்கள் அணிந்து வந்த அபாயாவையும் அனுமதித்து புதிய சுற்று நிருபத்தை வெளியிடுவது சிறப்பாக அமையும். 

மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தால் சில அரச அதிகாரிகளினால் , அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் தேவையற்ற நெருக்கடிகளை எதிர் கொள்ள நேர்ந்தது. 

இதைத் தவிர்க்கும் பொருட்டு ஆடைகள் தொடர்பில் தெளிவான வரையறைகளை உள்ளடக்கி புதிய சுற்று நிருபத்தை வெளியிட வேண்டும் என்றும் ரிஷாத் பதியுதீன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51