(எம்.ஆர்.எம்.வஸீம்)

எனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் மானநஷ்டயீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

நாட்டில் பயங்கரவாத தாக்குதலானது ஐ.எஸ். அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். கா்தினால் மல்கம் ரன்ஜித்தும் இதுதொடர்பாக தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பான பல உண்மைகள் வெளிவரும். அதேபோன்று இந்த தாக்குதலை பின்னால் இருந்து செயற்படுத்தியவர்கள் யார் என்பது இன்னும் சில தினங்களில் வெளிவரும். 

நாட்டில் சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இல்லை. அதனால்தான் ரத்தன தேரர் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும்போது உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸார் என்ன செய்கின்றனர் என்று தெரியாமல் இருக்கின்றார் என்றார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.