(எம்.எப்.எம்.பஸீர்)

தன்னை கைதுசெய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என அறிவிக்குமாறு கோரி, குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர்  சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தககல் செய்துள்ளார். 

குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால்,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்,  சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர,  பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு செயலர் ஜெனரால் ஷாந்த கோட்டேகொட மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே  இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை அவர் தககல் செய்துள்ளார். 

தற்போதும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி, தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தககல்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.