(நா.தினுஷா) 

முழு உலகமும் இந்த நாட்டை மதிக்கும் வகையிலான சூழலை உருவாக்கினோம். சர்வதேசம் இலங்கை மீது வைத்திருந்த மதிப்பு அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவையே சாரும். ஆனால் அதனை அவர் பாதுகாத்து கொள்ளவில்லை  என்று சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அத்துடன் வாய்ப்பேச்சினால் ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது. சிந்தித்து செயற்படுவதனூடாகவே  முன்னேற்றமடைய முடியும். இந்த அரசாங்கத்தில் குறைபாடுகள்  உள்ளன. இல்லை என்று கூட முடியாது. குறையில்லாமல் எந்த அரசாங்கங்கமும் ஆண்டதும் கிடையாது.  

குழப்பங்கள் நிறைந்த அரசாங்கமே வெற்றி அடையும். வெவ்வேறு பிரச்சினைகள் உருவாகலாம். ஒவ்வொருவரும்  பல்வேறு கருத்துக்களை முன்வைக்கலாம். எது எவ்வாறாயினும்  அரசாங்கத்தின்  செயற்பாடுகளையும் வேலைத்திட்டங்களையுமே பார்க்க வேண்டும்.  அதனூடாகவே அரசாங்கம் தொடர்பான சுய தீர்மானங்களை மக்கள் எடுக்க முடியும் என்றும் கூறினார்.

ஜா - எல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.