(நா.தினுஷா) 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டி முதல் கொண்டு அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்கு அனைத்துக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொரளை வஜிராஷ்ராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் பணம் அரசாங்கத்தின் சுய தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தினர் மக்களை பற்றி சிந்திக்காமலேயே செயற்பட்டு வருகின்றனர்.  ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிலவும்  ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டிக்காக மக்களின் பணத்தை வீணடிக்கிறார்கள். ஆகவே தொடரந்ந்து மக்களின் பணத்தை வீணடிக்கும்  செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிருத்தி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். 

பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு அரசியல் பழிவாங்கள்களுக்காக சமுர்தி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் மக்களின் செலவுகள் அதிகரித்து  வருமானம் குறைவடைந்ததுள்ளது. ஆகவே 2015 ஆம் ஆண்டு முதல் மக்களின் வருமான வீதம் குறைவடைந்துள்ளமையினால்  அரசாங்கம் மீதான எதிர்ப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவுமே இந்த சமுர்தி நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.