இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 285 ஓட்டங்கள‍ை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பிஞ்ச் மொத்தமாக 116 பந்துகளை எதிர்கொண்டு சிறப்பாக துடுப்பெடுத்தாடி 2 ஆறு ஓட்டங்கள் 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 100 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 53 (61) ஓட்டத்தையும், உஷ்மன் கவாஜா 23 (29) ஓட்டத்தையும், ஸ்மித் 38 (34) ஓட்டத்தையும், மெக்ஸ்வெல் 12 (8) ஓட்டத்தையும், ஸ்டோனிஸ் 8 (15) ஓட்டத்தையும் பட்லர் ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், அலெக்ஸ் கரி 38 (27) ஓட்டத்துடனும், மிட்செல் ஸ்டாக் 4 (6) ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஜோப்ர ஆச்சர், மார்க்வூட், பென் ஸ்டோக், அடில் ரஷித் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

photo credit : icc