ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர  

Published By: R. Kalaichelvan

25 Jun, 2019 | 06:39 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மஹிந்த தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாதகமாக அமையாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாண்மை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்நிலையில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது குறித்தே ஆராய வேண்டும். அதனை விடுத்து வீண் முரண்பாடுகளில் ஈடுபடக் கூடாது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை , ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள அக்கட்சியின் சம்மேளனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் என்று எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது வரையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. 

பொதுஜன பெரமுன தரப்பில் வேட்பாளர் குறித்து உத்தியோக பூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் வரை கூட்டணி தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. 

அதே வேளை இரு தரப்பின் சார்பிலும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது என்பதே எமது நிலைப்பாடாகும்.இதில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அது குறித்து ஆராயப்படும். அது வரையில் கூட்டணிக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22