களனி, நுங்கமுகொட  பகுதயில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே குறித்த துப்பாக்கிப் பிரயோக்த்தில் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,