அண்மையில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம் பிரசல்ஸிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடந்த 17 ஆம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

இதற்கு முன்னர் கிரேஸ் ஆசீர்வாதம் வெளிவிவகார அமைச்சின் செயலராகப் பணியாற்றியுள்ளார். கிரேஸ் ஆசீர்வாதத்தை தூதரக ஊழியர்கள் வரவேற்பு உபசாரம் மூலம் வரவேற்றனர். 

2019 இன் தூதரகத்தின் இலக்குகளை நோக்கிச் செயற்படுமாறு கிரேஸ் ஆசீர்வாதம் இதன் போது கேட்டுக் கொண்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதே அதி முக்கியம் என்று குறிப்பிட்டார். மற்றும் பெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் முதலீடு , உள்ளாசத்துறையை ஊக்குவித்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளுக்கு இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதியாளர் என்ற வகையில் முக்கியத்துவத்தை வழங்குகின்றது.

அத்துடன் கிரேஸ் ஆசீர்வாதம் பெல்ஜியத்தின் மரபுசார் அதிகாரியையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மரபுசார் அதிகாரியையும் சந்தித்தார். கிரேஸ் ஆசீர்வாதத்துக்காக பௌத்த இந்து கிருஸ்தவ இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன. அங்குள்ள இலங்கை சமூகத்துடனும் அன்வேப்பிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகருடனும் கிரேஸ் ஆசீர்வாதம் சந்திப்புக்களை மேற்கொண்டார்.