(நா.தினுஷா)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அபிவருத்தி என்ற பெயரில் பொய் அறிக்கைகளை கட்டி ஏமாற்றியது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச முன்வைக்கும் குற்றச்சாட்டை  ஒருக்கிழமைக்குள் அவர் நிரூபிக்க வேண்டும். 

 

இந்த சவாலை சஜித் ஏற்றுக்கொண்டு அடுத்த செவ்வாயக்கிழமைக்கு முன்னர்  அவர் குற்றச்சாட்டை  நிரூபித்தால் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக பந்துல குணவர்தன சவால் விடுத்தார். 

பொரளை வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,   

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பொய்  அறிக்கைககளை தயாரித்து அவற்றினூடாக நாடு அபிவிருத்தி பாதையில்  கொண்டுவரப்படடதாக காட்டி ஊழல் செய்துள்ளதாகவே சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டுகிறார். 

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறாயின் சஜித் குறிப்பிடுவது போன்று மஹிந்த அரசாங்கம் பொய் அறிக்கைகளின் மூலம் ஏமாற்றி இருக்குமாக இருந்தால் அதனை நிரூபிக்க வேணடும். 

எதிர்வரும்  ஒருக்கிழமைக்குள் அவர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டை  நிரூபித்து காட்ட வேண்டும். அடுத்த  செவ்வாய்கிழமை காலை  10.30 மணிக்கு முன்னதாக நிரூபித்தால் அன்று பிற்பகல் 12.30 மணியளவில்  எனது பாராளுமன்ற  உறுப்புரிமையை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைப்பேன்.

 அதன் பின்னர் தற்போது என்னால் முன்னெடுக்கப்படும்  செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவேன்.    

இது சஜித் பிரேமதாசவுக்கு  நான் விடுக்கும்  சவாலாகும்.  இந்த சவாலை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நாட்டின் அபிவிருத்திக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலான சஜித்தின் இந்த கருத்தை நான் வன்மையாகக்  கண்டிக்கிறேன். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு சிறந்த தகவலை  வழங்க வேண்டும். 

சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு அரசாங்க காலப்பகுதியிலும் இலங்கை குறைந்த வருமானம் பெறும்  அபிவிருத்தி அடைந்துவரும் நாடாகவே இருந்துவருகிறது. வெளிநாடுகளிடமிருந்து கடன் உதவிகளையும் நிவாரணங்களையும் ஒவ்வொரு அரசாங்கம் பெற்றுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். முப்பது வருடகால யுத்தம்  எமது பொருளாதார அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தது. இதன்காரணமாக உற்பத்திகளையோ அல்லது ஏறறு;மதிகயையோ அதிகரிப்பதற்கான  வாயப்புக்கள் எந்த அரசாங்கத்துக்கும் கிடைக்க வில்லை. 

பொருளதாரத்தை கட்டியெழுப்பதற்கு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அது கனவாகவே இருந்து வருகிறது. எவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாட்டை பிரிக்காத வகையில் 30 வருடகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தார். அதன்  பின்னர் தொழில் வாய்ப்புக்களில் அதிகரிப்பு, வருமானம் அதிகரிப்பு , அபிவிருத்தி, மக்களுக்க நிவாரணம் வழங்குதல்  என்று பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இலங்கை வரலாற்றில் புரட்சி ஏற்பட்ட ஆட்சிகாலமாக சர்வதேசமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. 

கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் காரணமாகவே 2010 ஆம் ஆண்டு வறுமை ஒழிக்கப்பட்ட நாடு என்ற அங்கிகாரத்தை சர்வதேசம் எமக்கு வழங்கியது. ஆனால் இந்த தரவுகளை ஏமாற்று வேலை என்று  அமைச்சர் சஜித் பிரேமதாச தவறான கருத்தை முன்வைத்துள்ளார்.  அவருக்கு ஆட்சியை பொறுப்பு ஏற்க்கும் எதிர்பாரப்பு இருக்குமாக இருந்தால் அறிக்கைகளை அரசியல்வாதிகள் தயாரிப்பது இல்லை என்பதை புரிந்துறகொள்ள வேண்டும். 

தரவுகளை  தொகுப்பதற்காகவே தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்  தனியாக இயங்கி வருகிறது. சகல தரவுகளையும் தொகுத்து வழங்கும் பொறுப்பு இந்த திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  பொருளாதாரம் தொடர்பான தகவல்களை மத்திய வங்கியே தொகுத்து வழங்குகின்றது. இந்த இரு திணைக்களங்களுங்களும்  அரசியல் தலையீடு இல்லாத  சிறந்த நிபுணர்களை கொண்ட நிறுவனங்கள் என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

அவ்வாறு எங்களது அரசாங்கம்  அறிக்கைகளை அடிப்படையாக  கொண்டு  ஏமாற்று வேலைகளை செய்திருக்குமாக இருந்தால் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியையே தரவுகளை அடிப்படையாக கொண்டு ஏமாற்று வேலைகளை செய்திருக்க வேண்டும். இந்த இருநிறுவனங்களதும் அறிக்கைகளிலும்  ஏமாற்று செயற்பாடுகளை முன்னெடுத்து நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக காட்டிக்கொண்டதாக சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார். 

இவர் நாடு அல்ல அவரது கிராமத்தை கூட ஆட்சி செய்ய பொறத்தமானவர் அல்ல என்று அவரின் கட்சியிலுள்ள சிலர் முன்வைக்கும் கருத்துக்களுடன் அவரது இந்த கருத்து தொடர்புப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும்  எமக்கு எழுகிறது. ஒரு நாடு குறைந்த வருமானமுடையதா ? நடுத்தர வருமானம் பெரும் நாடா? அல்லது உயர்தர வருமானமுடையதா என்பதை ஆள்வீத வருமானத்தை வைத்தே தீர்மானிக்கிறது. சஜித் ஜனாதிபதி பொறுப்பை ஏற்பாராக இருந்தால்  அவர் உலக வங்கியுடன் கணக்குவழக்குகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.