மன்னார் - ஊருமலை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

மன்னார் - ஊருமலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 22 - 27 வயதிற்கிடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து 60 கிராம் ஐஸ் போதைப் பொருள் , மீன்பிடி படகு மற்றும் மீன்பிடித்தலுக்கு பயன்படும் ஊபகரணங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.