இந்தியா, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பிரதேசத்தில், காமராஜர் பகுதியில் நடந்தேறிய கொடூரக்கொலையானது, அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில், வசித்து வந்தவரே, கட்டிடத் தொழிலாளியான கோமதிநாயகம். இவருக்கு வயது 35. இவருக்கு 33 வயதான முத்துமாரி எனும் மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி, வீட்டில் தனித்திருந்த முத்துமாரி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையறிந்த சங்கரன்கோவில் பொலிஸார் வீட்டிற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மோப்ப நாய்களைக் கொண்டு சோதனையிலீடுபட்ட பொழுது மோப்ப நாய்கள் கோமதிநாயகத்தின் வீட்டை நோக்கியே மீண்டும் வந்ததுள்ளது. மேலும், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியான கைரேகை பதிவுகள் எதுவும் தென்படவில்லை.

இந்நிலையில், கோமதிநாயகத்தின் மீதே பொலிஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளது. எனவே தீவிர விசாரணையின் பின்னர் தனது மனைவியை தானே கொலை செய்ததாக கோமதிநாயகம் ஒப்புக் கொண்டார். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், பிரச்சினை தீவிரமடைந்ததில், கடந்த 20ஆம் திகதி மனைவி முத்துமாரியை தானே வெட்டிக் கொலைசெய்து விட்டு வேலைக்குச் சென்று விட்டதாகவும் , பின்னர் எதுவுமே தெரியாதது போல் நடித்ததாகவும் கோமதிநாயகம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பொலிஸார் கோமதிநாயகத்தை கைது செய்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.