(செ.தேன்மொழி)

தெரனியாகல பகுதியில் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த காதலன் நஞ்சறுந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

தெரணியாகல - ரணஹிங்கந்த பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

ரணஹிங்கந்த பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சந்தேக நபர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அயலவர்களான இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள். இவர்களுக்கிடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் பொலிஸாரின் பாதுகாப்புடன் தற்போது  தெரணியாகலை  வைத்திய சாலையின் அவசரப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.