பங்களாதேஷில்  ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில்லெட் நகரில் இருந்து அந்நாட்டு தலைநகரான தாகா நோக்கி பயணத்தை ஆரம்பித்தபோது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்நிலையில் ரயிலின் பெட்டிகள் அனைத்தும் தடம் புரண்டு கால்வாய் ஒன்றில் விழுந்த நிலையிலேயே  ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.