(செ.தேன்மொழி)

கட்டுநாயக்க பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆட்டியம்பலம பகுதியில் கடந்த திங்கட்கிழமை திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஆடியம்பலம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும், 3 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.