தேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..? 

Published By: J.G.Stephan

25 Jun, 2019 | 12:35 PM
image

"கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தும் விவ­காரம் தீவி­ர­ம­டைந்து, மூவின மக்­க­ளி­டை­யேயும் மனக் கசப்­பையும் வெறுப்­பு­ணர்­வையும் வளர்த்துச் செல்­கின்ற ஒரு மோச­மான நிலைமை உரு­வாகி இருந்த போதிலும், அர­சி­யல்­வா­தி­களும், ஆட்­சி­யா­ளர்­களும் இந்த விட­யத்தில் அச­மந்தப் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­வது கவ­லைக்­கு­ரி­யது."

கல்­முனை வடக்கு உப பிரதேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தக் கோரி நடத்­தப்­ப­ட்ட போராட்­டமும், அதனை எதிர்த்து நடத்­தப்­பட்ட போராட்­டமும் இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு மோச­ம­டைந்து செல்­வதைக் கோடிட்டுக் காட்­டி­யி­ருக்­கின்­றன. 

இந்த செய­ல­கத்தை முழு­மை­யா­ன­தொரு பிர­தேச செய­ல­க­மாகத் தர­மு­யர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மூன்று தசாப்­தங்­க­ளாக நிறை­வேற்­றப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இந்தப் பிரச்­சி­னைக்கு அரசு உட­ன­டி­யாகத் தீர்வு காண வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி,  அந்தப் பிர­தே­சத்தைச் சேர்ந்த பௌத்த, இந்து மதங்­களின் தலை­வர்கள் இரண்டு பேருடன், கல்­முனை மாந­க­ர­சபை உறுப்­பி­னர்கள் இரண்டு பேரும், தமிழ் வர்த்­தக சங்கப் பிர­முகர் ஒரு­வரும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர். 

இந்தப் போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்டு மூன்று தினங்­க­ளுக்குப் பின்னர், இதற்கு எதி­ரான போராட்டம் ஒன்றை முஸ்­லிம்கள் ஆரம்­பித்­தி­ருந்­தார்கள். இதனால், கல்­முனை விவ­காரம் சமூக, அர­சியல் மட்­டங்­களில் மட்­டு­மல்­லாமல், மத ரீதி­யான மட்­டத்­திலும் சூடு பிடித்­தது. 

இந்தப் போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக தமிழர் தரப்பில் பல இடங்­க­ளிலும் அடை­யாள போராட்­டங்­களும் நடத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து கல்­முனை பிரச்­சினை தேசிய அளவில் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகப் பரி­ண­மித்­தது.

இந்தப் போராட்­டங்­களில் மூவின மக்­களும் பங்­கேற்­றி­ருக்­கின்­றார்கள். கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­க­மாக, தர­மு­யர்த்­து­வதன்  மூலம் அந்த செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட தமிழ் மக்­களின் அபி­வி­ருத்தி மற்றும் நிர்­வாக ரீதி­யான பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்­பது தமிழ் மக்கள் சார்­பி­லான கோரிக்­கை­யாகும். 

இந்தக் கோரிக்­கையை முன்­வைத்து பௌத்த துற­வி­களும், இந்து குருக்­களும், தமி­ழர்­களும் அவர்­க­ளுடன் சிங்­க­ள­வர்­க­ளும்­கூட, உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தனர். அம்­பாறை மாவட்­டத்தில் கல்­முனை முக்­கி­யத்­துவம் மிக்க தங்­க­ளு­டைய நகரம் என்றும், அந்த நக­ரத்தை உள்­ள­டக்­கிய கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­கத்தைத் தமிழ் மக்­க­ளுக்­கா­ன­தாக விட்டுக் கொடுக்க முடி­யாது என்­பது அங்­குள்ள முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு. 

இதனால் தமிழ் மக்­களின் கோரிக்­கையை நிறை­வேற்றக் கூடாது என்று அவர்கள் எதிர்க்­கின்­றார்கள். அத்­துடன் தர­மு­யர்த்­த­லுக்­கான போராட்­டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து அவர்­களும் சத்தியாக்கிரகப் போராட்­டத்தைத் தொடங்­கி­யி­ருந்­தார்கள். 

இந்தப் போராட்­டத்தின் பின்­ன­ணியில் இன, மத ரீதி­யான அர­சியல் மட்­டு­மல்­லாமல், ஆக்­கி­ர­மிப்பு அர­சி­யலும் இழை­யோடி இருக்­கின்­றது. தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவே, சாகும் வரை­யி­லான இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­துள்­ள­தாக கல்­முனை ஸ்ரீ சுபத்­தி­ரா­ராம மகா­வி­கா­ரையின் விகா­ர­தி­பதி ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர் தெரி­வித்­தி­ருந்தார். 

 உள்ளூர் மதத் தலை­வர்­க­ளி­னாலும், வர்த்­தகப் பிர­முகர் உட்­பட, உள்­ளூ­ராட்சி மன்ற அர­சியல் பிர­மு­கர்­க­ளி­னாலும் இந்தப் போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. தமிழ் மக்­களும், சிங்­கள மக்­க­ளும்­கூட இந்தப் போராட்­டத்தில் நேர­டி­யாகப் பங்­கேற்­றி­ருந்தனர்.

இந்தப் போராட்டம் கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லக முன்­றலில் நடத்­தப்­பட்டு வந்தது. அதே வேளை, அங்­கி­ருந்து சுமார் அரைக் கிலோ மீற்றர் தொலை­வுக்கும் உட்­பட்ட இட­மா­கிய கல்­முனை நகரின் பழைய பேருந்து நிலையப் பகு­தியில் முன்­னைய போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்டு மூன்று தினங்­களின் பின்னர், எதிர்ப் போராட்­டத்தை முஸ்­லிம்கள் ஆரம்­பித்­தி­ருந்­தார்கள்.

முப்­பது வரு­டங்­க­ளாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற கல்­முனை வடக்கு உப செய­ல­கத்தைத் தர­மு­யர்த்த வேண்டும் என்ற தமிழ் மக்­களின் கோரிக்­கையை வலி­யு­றுத்தி சிறிய அளவில் முன்னர் போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருந்த போதிலும், பௌத்த மத குரு ஒரு­வரின் தலை­மையில் ஆரம்­பிக்­கப்­பட்ட சாகும் வரை­யி­லான இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டமே கொழும்­பையும் விழித்­தெழச் செய்­தது. தேசிய அளவில் அனை­வ­ரையும் கல்­மு­னையை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்­தி­ருக்­கின்­றது. கிழக்கு மாகா­ணத்தை சமூக ரீதி­யா­கவும் மத ரீதி­யா­கவும் கொதி­நி­லைக்கு இட்டுச் சென்­றுள்­ளது.


சில அடிக்­கு­றிப்­புக்கள் 

கிழக்கு மாகாணம் அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகப் பிரிவின் பரப்­ப­ளவு 15.77 சதுர கிலோ மீற்றர்

கிராம சேவை­யாளர் பிரி­வு­களின் எண்­ணிக்கை 29

2018 ஆம் ஆண்­டின்­படி மொத்த குடும்­பங்­களின் எண்­ணிக்கை 9798

இதற்­க­மைய மொத்த சனத்­தொகை 36,346

இன அடிப்­ப­டையில் -

தமி­ழர்கள்  33007

முஸ்­லிம்கள்  3215

சிங்­க­ள­வர்கள்  124

மத அடிப்­ப­டையில் -

இந்­துக்கள்  30205

இஸ்லாம்  3215

கிறிஸ்­த­வர்கள்  2802 

பௌத்­தர்கள்  124

சமய வழி­பாட்டுத் தலங்கள் 

இந்து ஆல­யங்கள்  45

கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள்  12 

முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள்  03

பௌத்த விகாரை  01

2017 ஆம் ஆண்­டின்­படி வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை 22605

வர­லாற்றுத் தக­வல்கள்:

1989 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 12 ஆம் திகதி கர­வாகு வடக்கு என்ற பெயரில் நட­மாடும் அலு­வ­ல­க­மாக இந்த உப செய­லகம் உரு­வாக்­கப்­பட்டு செயற்­பட்டு பின்னர் கல்­முனை வடக்கு உப செய­ல­க­மாகப் பெயர் மாற்றம் பெற்று செய்ய­பட்டு வரு­கின்­றது.

1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி அமைச்­ச­ரவை கூடி கல்­முனை வடக்கு உப அலு­வ­லகம் உட்­பட, நாட்டில் உள்ள 28 உப பிர­தேச செய­லகங்­க­ளையும் பிர­தேச செய­ல­கங்­க­ளாகத் தர­மு­யர்த்­து­வது என்று தீர்­மா­னித்­த­தற்­க­மைய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. ஆனால், 27 உப செய­ல­கங்கள் தர­மு­யர்த்­தப்­பட்­ட­போ­திலும், கல்­முனை வடக்கு உப செய­லகம் மாத்­திரம் தரம் உயர்த்­தப்­ப­ட­வில்லை. 

இந்த உப செய­லகம் இன ரீதி­யான செய­லகம் என்றும், இது நிலத் தொடர்­பற்ற ஒரு பிர­தே­சத்தை உள்­ள­டக்­கி­யது என்றும், பயங்­க­ர­வா­தி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு உப பிர­தேச செய­லகம் என்றும் பல­த­ரப்­பட்ட பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக இந்தப் பிர­தே­சத்தைச் சேர்ந்த மூத்த குடிகள் தெரி­வித்­துள்­ளனர்.

நிலை­மைகள்

கல்­முனை நகரில் முஸ்லிம் வர்த்­த­கர்­களே பெரும்­பான்­மை­யாக இருக்­கின்ற போதிலும், அவர்­களோ, அல்­லது கல்­முனை வடக்­குக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்லிம் கிரா­ம­வா­சி­களோ பூர்­வீகக் குடி­க­ளல்ல என்றும், வர்த்­தக நோக்­கங்­க­ளுக்­காக வருகை தந்த முஸ்­லிம்­களே இங்கு பல்கிப் பெரு­கி­யுள்­ள­தா­கவும் அங்­குள்ள வயதில் மூத்­த­வர்கள் கூறு­கின்­றனர். 

கல்­முனை நகரில் வர்த்­தக நிலை­யங்­களை அமைத்தும், தமி­ழர்­களின் சொத்­துக்­க­ளாக இருந்­த­வற்றை காலத்­துக்குக் காலம் நில­விய அர­சியல், இரா­ணுவ, பொரு­ளா­தார நெருக்­க­டிகள் மிகுந்த சூழலைப் பயன்­ப­டுத்தி அவற்றைக் கொள்­வ­னவு செய்து குடி­யே­றி­ய­தா­கவும் அவர்கள் கூறு­கின்­றார்கள். இவ்­வாறு கொள்­வ­னவு செய்­யப்­பட்ட வர்த்­தக நிலை­யங்கள் பல யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த தமிழ் வர்த்­த­கர்­க­ளுக்குச் சொந்­த­மாக இருந்­தன என்றும் அவர்கள் நினை­வு­கூர்­கின்­றார்கள்.

சுனாமி பேர­லைகள் கட­லோ­ரத்தைத் தாக்­கி­ய­தை­ய­டுத்து, கல்­முனை பிர­தே­சத்தில் அமைக்­கப்­பட்ட சுனாமி குடி­யி­ருப்­புக்­களில் இர­வோடு இர­வாக அப்­போது அர­சியல் செல்­வாக்கு பெற்­றி­ருந்த அர­சி­யல்­வா­தி­க­ளினால் முஸ்லிம் குடும்­பங்கள் கொண்டு வந்து குடி­யேற்­றப்­பட்­ட­தா­கவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்கள். 

இந்தப் பிர­தே­சத்தின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பெரும்­பான்மை பலத்தைப் பெற்­றி­ருந்த முஸ்லிம் உறுப்­பி­னர்கள், தமிழ்க் கிரா­மங்­க­ளி­டையே முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை பலத்தை உரு­வாக்கும் நோக்கில் திட்­ட­மிட்ட வகையில் குடி­யேற்றக் கிரா­மங்­களை உரு­வாக்­கி­ய­தா­கவும், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளும்­கூட முஸ்­லிம்கள் தமி­ழர்­கள்­தானே என்ற எண்­ணப்­போக்கில் இந்த நட­வ­டிக்­கை­களை கவ­னத்­திற்­கொண்டு அவர்கள் கவ­னத்திற் கொள்­ளா­தி­ருந்­த­தா­கவும் இதன் பய­னா­கவே இன்று பல பிரச்­சி­னைகள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன என்றும் அங்­குள்ள மூத்த பிர­ஜைகள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

இத்­த­கைய திட்­ட­மிட்ட வகையி­லேயே அம்­பாறை மற்றும் கல்­முனை பிர­தே­சங்­களில் தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மா­னதும், அவர்­களின் பயன்­பாட்டில் இருந்­த­வை­யு­மான மேய்ச்சல் நிலங்­களும் முஸ்லிம் மக்­க­ளினால் படிப்­ப­டி­யாக கைய­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அவர்கள் நினை­வு­கூர்­கின்­றார்கள். 

இந்த மேய்ச்சல் தரைகள் தொடர்பில் கடந்த காலங்­களில் இரண்டு சமூ­கங்­க­ளி­டை­யேயும் தொடர்ச்­சி­யாகப் பிரச்­சி­னைகள் இருந்து வந்­த­தையும், அவற்­றுக்கு சமூக மட்­டத்­திலோ அல்­லது அர­சியல் வழி­மு­றையிலோ தீர்வு காணப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள மூன்று மாவட்­டங்­க­ளிலும் பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்­ட­போது, முஸ்லிம் மக்­க­ளுக்­கான பிர­தேச சபைகள் உரு­வாகும் வகை­யி­லேயே எண்­ணிக்கை அடிப்­ப­டையில் கிரா­ம­சேவை பிரி­வுகள் தொகுக்­கப்­பட்­டி­ருந்­தன என்ற விப­ரத்­தையும் ஊர்ப்­பி­ர­மு­கர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்கள். இங்கு 6, 7 கிராம சேவை பிரி­வு­களைக் கொண்­ட­தாக முஸ்லிம் பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்ட போதிலும், தமிழ் மக்கள் செறிந்து வாழ்­கின்ற கிராம சேவை பிரி­வுகள் 12, 13 என்று எண்­ணிக்­கையில் அதி­க­மாக இருந்த போதிலும், அவற்றை ஒன்­றி­ணைத்து தமிழ் பிர­தேச சபை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்ட வர­லாற்­றையும் அவர்கள் எடுத்­து­ரைத்­தனர்.

 கல்­முனை மற்றும் அம்­பாறை மாவட்டப் பிர­தே­சங்­களைச் சேர்ந்த தமி­ழர்­க­ளான மூத்த பிர­ஜைகள் தெரி­வித்­துள்ள இந்தத் தக­வல்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தகுதி வாய்ந்த அதி­கா­ரி­களும், தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­களும், தமிழ் அர­சியல் தலை­வர்­களும் முன்­வர வேண்டும். 

அதே­வேளை, கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே குடி­யி­ருப்புக் காணிகள் மேய்ச்சல் தரைகள் உள்­ளிட்ட காணிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் விரி­வான ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு, இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் சமூக மட்­டத்தில் ஓர் இணக்­கப்­பாட்டை எட்டச் செய்­வது அவ­சி­ய­மாகும். 


அச­மந்த போக்கு 

கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தும் விவ­காரம் தீவி­ர­ம­டைந்து, மூவின மக்­க­ளி­டை­யேயும் மனக் கசப்­பையும் வெறுப்­பு­ணர்­வையும் வளர்த்துச் செல்­கின்ற ஒரு மோச­மான நிலைமை உரு­வாகி இருந்த போதிலும், அர­சி­யல்­வா­தி­களும், ஆட்­சி­யா­ளர்­களும் இந்த விட­யத்தில் அச­மந்தப் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­வது கவ­லைக்­கு­ரி­யது. 

இந்த விவ­காரம் குறித்து ஏற்­க­னவே நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்ற போதிலும், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னால் பௌத்த துற­வி­களின் உண்­ணா­வி­ரதப் போராட்ட அணு­கு­முறை வலிமை பெற்று வந்­துள்ள ஒரு சூழலில் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக மூன்று மாதங்கள் செல்லும் என்று அரச தரப்பில் கூறி­யி­ருப்­பது பொருத்­த­மான நட­வ­டிக்­கை­யாகத் தெரி­ய­வில்லை.

அர­சாங்­கத்தின் இந்தத் தீர்­மா­னத்தை அல்­லது இந்த நட­வ­டிக்­கைக்­கான தீர்­மா­னத்தை தமிழ் மக்­களின் அர­சியல் தலை­வர்கள், ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் ஆமாம் சாமி போட்டு தலை­யாட்டிக் கொண்டு, போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்­க­ளிடம் அதனை எடுத்துச் சென்­ற­போது இடம்­பெற்ற சம்­ப­வங்­களை நாடே அறியும். உலக நாடு­களும் அறியும். 

உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­துக்குத் தலைமை ஏற்­றி­ருப்­ப­வர்கள் உண்­மை­யி­லேயே பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற இத­ய­சுத்­தி­யுடன் ஈடு­பட்­டி­ருந்­தார்­களா அல்­லது வெளிச்­சக்­திகள் ஏதேனும் பின்னால் செயற்­ப­டு­கின்­றதா என்ற ஐயப்­பாடு இயல்­பா­கவே ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்­து­கின்ற பிரச்­சி­னை­யை­விட எத்­த­னையோ பிரச்­சி­னை­க­ளுக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்த போது, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இத்தகைய தலைமையும் வழிகாட்டல்களும் உருவாகியிருக்கவில்லை. 

மாறாக உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், முஸ்லிம் மக்கள் பாதுகாப்பு ரீதியான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஒரு சூழலில், சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகளின் வன்முறைகளுக்கும், இன மத ரீதியான வெறுப்புணர்வுக்கும் ஆளாகியுள்ள ஒரு தருணத்தில், பௌத்த துறவிகளின் ஆளுமை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் செல்வாக்கு பெற்றிருப்பதென்பது, தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தி இரண்டு தரப்பினரையும் அடக்கியொடுக்குகின்ற பேரினவாதிகளுடைய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றார்கள்.  

தேசிய அளவில், இது ஓர் ஆபத்தான சமூக, இன, மதவாதம் சார்ந்த ஓர் அரசியல் நகர்வு என்றும் இது இந்த நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கத்தக்க செயற்பாடு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திருப்பதைக் காண முடிகின்றது. 

குறுகிய அரசியல் இலாபங்களைக் கருத்திற் கொள்ளாமல் தேசிய நலனைக் கவனத்திற் கொண்டு, ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தீர்க்கமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இது இன்றைய சூழலில் அவசியமானது.

பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22