“ஈசி கேஸ்” முறைமையில் பணத்தைப் பெற்று ஹெரோயின் பக்கட்டுக்களை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை இன்று வெலிமடைப் பொலிசார் கைது செய்துள்ளனர்..

 650, 800, 110 மில்லிகிராம் ஹெரோயின் பக்கட்டுக்கள் கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

வெலிமடைப் பகுதிகளின் மின்கம்பங்களில் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டு, அவ் இலக்கங்களை ஹெரோயின் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் தொலைப்பேசிக்கு அனுப்பி “ஈசி கேஸ்” மூலம் ஹெரோயினுக்குரிய பணத்தைப் பெற்று வருவதாகக் கைது செய்யப்பட்ட மூவரும், பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27, 31, 32 வயதுகளையுடைய வெளிமடை பகுதி இளைஞர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.