நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்தி நிறுவனம் செயற்பட்டுவருகிறது.

இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள எரிவாயு குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு அங்கு எரிவாயு கசிந்து தீப்பிடித்துள்ளது. 

குறித்த சம்பவத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் இந்த கோர விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள நிலையில்  மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.