மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் அரசாங்கத்தினால் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளைச் சிலர் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் கடந்த 1.09.2016 அன்று வீட்டுத் தொகுதி ஒன்று மின்னொழுக்கு காரணமாகத் தீக்கிரையானது. இந்நிலையில் குறித்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் தற்காலிக கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அரங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் அந்த 16 குடும்பங்களுக்கும் புதிதாக வீடுகள் அமைத்துத் தரப்பட்டன.
இதையடுத்து குறித்த 16 குடும்பங்களில் சில குடும்பங்கள் மாத்திரமே குறித்த புதிய வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் சிலர் குறித்த தற்காலிக கூடாரங்களிலேயே தங்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய வீடுகளைச் சிலருக்கு வாடகைக்கு விடுவதாகவும் சிலர் குறித்த வீடுகளை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகள் எரிந்து அவதியுற்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் அதனைச் சிலர் முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதனால் அரசாங்கத்தில் எமக்குக் கிடைக்கும் சலுகைகள் இல்லாது போகும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த குடியிருப்புக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM