தொழில் நுட்ப கற்கை நெறிகளை கற்பதன் ஊடாக தொழிற்சந்தையில் காணப்படுகின்ற சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னோக்கி செல்ல முடியும் என கொழும்பு மருதானை தொழில்நுட்ப கல்லூரியின் பரீட்சித்தல் மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பணிப்பாளர் எஸ்.பரமேஷ்வரன் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்ப கல்லூரிகளில் தொழில் நுட்ப கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்பவர்களுக்கு உள்நாட்டில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியிலும் நல்ல கிராக்கி உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
வீரகேசரிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித் தார்.
அச்செவ்வியின் விபரம் வருமாறு,
கேள்வி : மருதானை தொழில்நுட்ப கல்லூரியின் ஆரம்பம் மற்றும் அதன் செயற்பா டுகள் குறித்து சற்று தெளிவுபடுத்த முடியுமா?
பதில் : தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தலை நோக்காகக்கொண்டு அரசின் முழு அங்கீகாரத்துடன் 1893 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த மருதானை தொழில்நுட்ப கல்லூரி. இந்த கல்லூரி உரித்தான 39 தொழில் நுட்ப கல்லூரிகளும் 9 தொழில் நுட்பவியல் கல்லூரிகளும் நாடளாவிய ரீதி யில் நிறுவப்பட்டுள்ளன.
கேள்வி : ஒருவருடத்தில் இந்த கல்லூரிகளின் கற்கை நெறிகளுக்கு அண்ணளவாக எவ்வளவு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றார்கள்?
பதில் : கடந்த வருடத்துக்கான தரவுகள் குறித்த அறிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த 2016ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் மருதானை தொழில் நுட்ப கல்லூரியில் மாத்திரம் 20 ஆயிரத்து 300 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் அவர்களில் 11 ஆயிரத்து 300 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அதேபோன்று இவ்வருடத்திலும் கற்கை நெறிகளுக்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேள்வி : பொதுவாக இந்த கல்லூரிகளில் எவ்வாறான கற்கைநெறிகள் கற்பிக்கப்படுகின்றன?
பதில் : மாறிவரும் வேலைச் சூழலின் மாற்றத்திற்கு அமையவும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் வேலைக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற கற்கை நெறிகளே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிகளை தொடர்வதன் மூலம் எதிர் காலத்தில் நவீன மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய சிறந்த தேர்ச்சியை பெற்றுக்கொள்வதுடன். தொழில் பயிற்சியையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, சமூகத்தில் நன்மதிப்புடைய சிறந்த பிரஜையாக திகழ முடிவதுடன், சுயதொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொள்ள முடியும் இதன் ஊடாக மாறிவரும் நவீன உலகின் தேவைக்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடிகின்றது. தேசிய தொழில் தகைமை சான்றிதழ்களை உள்ளடக்கிய வண்ணம் அமையப்பெற்றுள்ள இத்தகைய கற்கை நெறிகளை கற்பத னூடாக உள்நாட்டில் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெறும் அதேவேளை வெளிநாடுகளிற்கு செல்வார்களாயின் அங்கும் சிறந்த வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கேள்வி: தேசிய தொழில் தகைமை (NVQ) மட்ட கற்கை நெறிகள் எத்தனை உள்ளன?
பதில் : விசேட தேசிய தொழில் தகைமை மட்டங்களில் 1, 2, 3 மற்றும் 4ஆம் மட்டங்களை தொடரக்கூடிய வாய்ப்புகள் நாடுபூராகவும் உள்ள எமது அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் காணப்படுகின்றன.
இதேவேளை இந்த தேசிய தொழில் தகைமை மட்டங்களை தமிழ், சிங்கள மொழிகளில் தொடரக்கூடிய வாய்ப்புக் களும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் 5ஆம், 6ஆம் மட்டங்களை ஆங்கில மொழியிலேயே தொடரமுடியும்.
ஆயினும் இவ்வருடத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தில் மாணவர்களின் தொகை அமையப்பெறுமாயின் அவர்கள் தமது தாய் மொழியில் குறித்த பாடநெறியை தொடரக்கூடியதாக இருக்கும். அதற்கான அனுமதி கல்வி அமைச்சினால் கிடைக்கப்பெற்றுள்ளது.
தேசிய தொழில் தகைமைகளை கொண்டு அமைந்துள்ள இந்த கற்கை நெறிகள் 08 தேசிய தொழில் தகைமை மட்டங்களை கொண்டு அமைந்துள்ளது. அதற்கமைய ஒரு மணவர் 3, 4ஆம் தேசிய தொழில் தகைமை மட்டங்களை பூர்த்தி செய்வாரெனின் சான்றிதழ் மட்டத்தை பூர்த்தி செய்தவராக கருதப்படுவார்.
இதேவேளை 5, 6ஆம் மட்டங்களை பூர்த்தி செய்வாரெனின் குறித்த மாணவரு க்கு டிப்ளோமா (NVQ) மட்ட சான்றிதழ் வழங்கப்படும். அவ்வாறாக 7, 8ஆம் மட்டங்களை பூர்த்தி செய்யும் போது டிகிரி (NVQ ) மட்ட சான்றிதழும் வழங்கப்படும்.அதற்கமைய உயர் தேசிய டிப்ளோமா (NVQ )பாட நெறியை பூர்த்தி செய்து தமது திறமைகளை ெவளிக்காட்டிய மாணவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்படும்.
இவ்வருடத்திற்கான விருது வழங்கும் விழா எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மேலும் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களில் குறிப்பிட்ட அளவானோர் 7 ஆவது மட்டத்தை பூர்த்தி செய்வதற்காக தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றனர். சிலர் தமது தொழில் துறைகளில் அதிக கேள்வி நிலவும் துறையில் சிறப்புதேர்ச்சி பெற்றவர்களாக வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொள்கின்ற னர். இவ்வாறாக தேசிய தொழில் தகைமை மட்டங்களை பூர்த்தி செய்த மாணவர்கள் வெளிநாடுகளில் பல இலட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
கேள்வி : தேசிய பொருளாதாரத்தில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு எத்தகையது?
பதில் : தொழில் நுட்பக்கல்லூரிகளின் ஊடாக கற்கை நெறிகளை பூர்த்தி செய்து வெளியேறும் மாணவர்கள் இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்குபவர்களாக காணப்படுகின்றனர்.
அவர்கள் பொருளாதார வளர்ச்சியில் நேரடியான செல்வாக்கைசெலுத்துவதுடன் இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை செலுத்துகின்றனர் என பெருமையுடன் தெரிவித்துக்கொள்ளக்கூடியதாக உள்ளது.
இருப்பினும் இலங்கையில் தொழில் துறைக்கு தேவையான கேள்வி மட்டம் அதிகரித்துள்ளது. அந்த கேள்வி மட்டத்தை பூர்த்தி செய்வதற்கு மனித வள பற்றாக்குறை நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்ப கல்லூரிகளில் இருந்து பாடநெறிகளை பூர்த்தி செய்துவெளியே றும் மாணவர்களின் எண்ணிக்கை குறை வாகவும் தேவைக்கான கேள்வி மட்டம் அதிகரிக்கும் போது இந்நிலை உருவாகின் றது. எமது தொழில்நுட்ப கல்லூரிகளை ஏனைய தொழில்நுட்ப கல்வி நிறுவனங் களுடன் ஒப்பிடும் போது அதிக அளவிலான வளங்களையுடையனவாகக் காணப்படு கின்றன. அதிகவளங்கள் எனும் போது நவீன தொழில்நுட்ப கருவிகளும் உபகரணங் களும் எமது திணைக்களத்திற்கு கீழ் இயங் கும் தொழில் நுட்பக்கல்லூரிகளில் காணப்ப டுகின்றன. மேலும் கா.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெறாத மாணவர்களும் கூட இந்த பாட நெறிகளை கற்பதன் ஊடாக சிறந்த தொழில் வாய்ப்பு மற்றும் சமூகத்தில் நன்மதிப்பு டையவர்களாக திகழ முடிகின்றது.
ஆகவே, பெற்றோர்கள் தமது பிள்ளைக ளின் எதிர்காலத்தில் அக்கறையுடையவர் களாக செயற்பட்டு நாட்டுக்கு சிறந்த பிரஜை களை உருவாக்கித் தர எம்முடன் இணைந்து செயற்படுவது நன்மை பயக்கும் என்றார்.
–ஆர்.விதுஷா















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM