ஸ்டீவ் ஸ்மித் டேவிட் வோர்னரை இன்றைய போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்கள் கேலி செய்தால்  விராட்கோலி போன்று கேலி செய்வதை நிறுத்துமாறு நான் ரசிகர்களை  கேட்டுக்கொள்ள மாட்டேன் என இங்கிலாந்து அணியின் தலைர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் நிறைய பணம்செலுத்தி போட்டிகளை பார்க்கின்றனர் அவர்கள் தாங்கள் நினைத்ததை செய்யலாம் என மோர்கன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் எப்படி நடந்துகொள்ளப்போகின்றார்கள் என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ள அவர் இரண்டு வீரர்கள் தண்டனை பெற்று அதனை அனுபவித்து மீண்டும் ஆடுகளத்திற்கு திரும்பியுள்ளார்கள் என்பதற்காக அவர்கள் கிரிக்கெட் உலகிற்குள் நேரடியாக வரவேற்கப்படுவார்கள் என கருதமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரசிகர்கள் கேலி செய்வது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவர் அரோன் பின்ஞ் கேலி செய்யப்படும் வீரர்களிற்கு இது இன்னமும் சிறப்பாக விளையாடவேண்டும் என்ற ஊக்கத்தை வழங்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.