கேகாலைப் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் இரு வேறு சம்பவங்களில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை, தெஹியோவிட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவி ஒருவரும், புலத்கோபிட்டிய பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தேஹியோவிட்ட, கனங்கம, பொல்பராவ என்ற இடத்தில் 12 வயதுடைய தெஹியோவிட்ட தேசிய பாடசாலை மாணவி வீட்டில் இருக்கும் போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, புலத்கோட்டிய, உந்துகொடைப் பிரதேசத்தில் வீட்டிலிருந்தவேளை 34 வயதுடைய நபர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவங்கள் தொடா்பாக புலத்கோபிட்டிய பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.