வவுனியா பழைய பஸ்  நிலையத்தில் இன்றிலிருந்து தனியார் பஸ் சேவைகளும் இ.போ.ச. பஸ்களும் இணைந்து பணிகளில் ஈடுப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் உத்தரவிற்கு அமைவாக நேற்றிலிருந்து பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றிலிருந்து உள்ளூர் பஸ் சேவைகளை இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவைகளை மேற்கொள்ளும் அனைத்து உள்ளூர் பஸ்களும் பழைய பஸ் நிலையத்தினூடாக தமது சேவைகளை இன்று காலையிலிருந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பழைய பஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பழைய பஸ் நிலையத்தினூடாக பொதுமக்கள் தமது பயணங்களையும் மேற்கொண்டு வருவதால் பழைய பஸ் நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்குத்திரும்பியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.