கடந்த ஏபரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையை சேர்ந்த அப்துல்லா என்ற ஊழியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி ஷங்ரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாரி மேற்கொண்ட தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன் கருப்பையா அல்லது அப்துல்லா என்ற ஊழியரே இவ்வாறு எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.