நவகத்தேகம பகுதியில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 43 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டுள்ளதுடன் 19 வயது மற்றும் 1  1/2  வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.