(வாஸ் கூஞ்ஞ)மதுபோதையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்குள் உட்புகுந்த நபர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் கடந்த திங்கள் கிழமை மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இவ்சந்தேக நபர் மன்னார் நீதிமன்றில் பதில் நீதவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஐராகிய நிலையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இவருக்கு தண்டப்பணமாக 3500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் பொது இடத்தில் புகைப்பிடித்ததாக ஒருவரையும் பொலிஸார் அதே தினம் மன்றில் சந்தேக நபரை ஆஐராக்கியபோது அவரும் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 1500 ரூபாவை பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ அபராதமாக விதித்தார்.