ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘தர்பார்’ படத்தில் திருநங்கை ஜீவா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் தற்போது வில்லன் நடிகர் ப்ரீத்திக் பப்பர் நடித்து வருகிறார். அத்துடன் பாலின சிறுபான்மை நடிகையான ஜீவாவும் நடிக்கிறார். 

இவர் ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெற்றிபெற்ற ‘தர்மதுரை’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர். இவர் ஏராளமான குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020 ஜனவரி 9 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் ‘தர்பார்’ படத்தில், சுப்பர் ஸ்டாருடன் நயன்தாரா, யோகி பாபு.  ஆனந்தராஜ், ஹரீஷ்  உத்தமன்,  போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுக்க. பெரும் பொருட்செலவில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொலிஸ் அதிகாரியாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.