போதையற்ற தேசத்தை உருவாக்குவதன் ஊடாக வளமான தேசத்தை சந்ததியினரிடம் கையளிப்பதற்கு 24 ஜூன் முதல் ஜூலை 1 வரை தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, நான் போதையை எதிர்க்கிறேன், என்னும் தொனிபொருளில் நிகழ்வுகள் இன்று காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் போதை ஒழிப்பிற்கான செயற்திட்ட நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்களான சிறுநீரக நோய்தடுப்பு, பிள்ளைகளை பாதுகாப்போம், சுற்றாடல் பாதுகாப்பு, உணவு உற்பத்தி,போசாக்கு திட்டம், வனரோபா ஆகிய திட்டங்களின் முன்னேற்ற நகர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

யாழ் மாவட்ட செயலணி குழுவும் பாராளுமன்ற உறுப்பினரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

போதை ஒழிப்பிற்காக விசேடமாக கிராம மட்டத்தில் கண்காணிப்பு குழுக்களை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வறுமைக்கும் சுற்றுசூழலுக்கும் தொடர்பிருப்பதை போன்று ,போதைவஸ்து பாவனைக்கு அடிமையானோரும், கிராமமும் பல்வேறு பிரச்சினைகளுடன் வறுமையை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், தண்டனைகள் பெற்று சிறைச்சாலைகளுக்கு செல்வோரும் சீர்திருத்தம் பெற வேண்டுமே தவிர மேலும் குற்றங்களையும் போதைவஸ்து பாவனையை ஏற்ப்படுத்த கூடிய தொடர்புகளை ஏற்படுத்துபவராக இருக்க முடியாது எனவும் பாரதளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின் யாழ் மாவட்ட கருத்திட்ட ஒருங்கிணைப்பாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் சிறுநீரக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள பிரதேசத்திற்கு வடிகட்டிய நீரை வழங்குவதற்கும் ஜனாதிபதியின் செயலணியினால் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை. சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மண் அகழ்வை தடுப்பதற்காகவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கூறப்பட்டது.

வனரோபா திட்டத்தின் மூலம் உமியை பரவுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் எனவும் ஜோசனை தெரிவிக்கப்பட்டது.

உணவு உற்பத்தி செயற்திட்டதின் மூலம் 6000 கெக்டேயர் அளவில் மரவள்ளி பயிர் செய்கையை ஊக்குவிப்பதற்கு கிராம சக்தி சங்கங்களின் ஊடாக உற்பத்தி கிராமங்களை இனம் காண்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உருளைகிழங்கு உற்பத்தியாளர்கள் நலன்கருதி இம் முறையும் உரிய பயனாளிகளுக்கு கிடைக்க கூடியவாறு மானிய அடிப்படையில் ஜனாதிபதியின் செயற்திட்டத்தின் மூலம் நடைமுறை படுத்தப்பட உள்ளதாகவும் விவசாய துறை சார் அதிகாரியிடம் உரிய பயனாளிகளை இனம் காணுமாறும் பாரதளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,சிவில் அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்கள், மற்றும் திணைக்கள துறைசார் அதிகாரிகள், பொலிசார் மற்றும் மக்களின் ஒன்றினைவுடன் தகவல்களுடன் கூடிய போதைவஸ்து பாவனையை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள் மற்றும் சீர்திருத்த பயிற்சி நிலையங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது.