(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை நடத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.  

பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் இது தொடர்பில் விஷேட ஆலோசனைக் கடிதம் ஒன்றூடாக தெரியப்படுத்தியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

தற்கொலை தாக்குதல்களை முற்றாக அல்லது பகுதியளவிலேனும் தடுக்கத் தவறியமையை மையப்படுத்தி, அவர் அவரது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றவில்லை என்பதை அவதானித்தே இந்த விசாரணைகளுக்கான ஆலோசனைகளை வழங்கியதாக சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள ஆலோசனை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.