ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு மேர்வின் சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் முத்துஹெட்டிகம ஆகியோரின் செயல்பாடுகளே காரணம் என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கமன்பில  தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், ராஜித சேனரத்னவும் மற்றும் துசித்த ஹல்லோளுவவும் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி இரண்டு வருடங்களாக இரகசியமாக திட்டமிட்டு செயற்பட்டதன் விளைவாகவே நடைபெற்றது என தெரிவித்திருந்தனர்.

இதற்கு அமைய மேர்வின் சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் முத்துஹெட்டிகம ஆகியோர்  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ராஜித சேனரத்னவின் திட்டத்தில் இணைந்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி வீழ்ச்சிக்கு செயற்பட்டமை தெரிய வந்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.