(நா.தனுஜா)

நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இனத்தவரின் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதியானதாக இருக்கும். இனங்களுக்கு இடையிலான தேசிய ஒற்றுமையே மக்கள் பாதுகாப்பிற்கான அடிப்படையாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார்.

மதம் சார்ந்த தீவிரவாத வெறித்தனத்தையும், இனவாதத்தையும் தோற்கடித்து தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பையும், தேசிய ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் இன்று திங்கட்கிழமை மருதானையிலுள்ள சமூக, சமய நடுநிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றிய போதே டில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டார்.