நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிப்பு

Published By: R. Kalaichelvan

24 Jun, 2019 | 07:07 PM
image

போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின்பேரில் நேற்று முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாரத்தின் முதலாவது தினமான பாடசாலை தினத்தில் தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை, மதுபானம் மற்றும் ஏனைய போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பிரதான பாடசாலை நிகழ்வு கொலன்னாவ டெரன்ஸ் என் டி சில்வா கல்லூரியில் நடைபெற்றது. 

இதனுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும் வெல்லம்பிட்டிய சிங்கபுர கிராமத்தில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி போதைப்பொருள் ஒழிப்பு பற்றி கிராம மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டமும் தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதேநேரம் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் போதையிலிருந்து விடுதலைப் பெறுவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கை, சட்டதிட்டங்களை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல், சுற்றிவளைப்புகள், சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் போன்ற முக்கிய நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாளான இன்று மக்கள் அமைப்புகளை மையப்படுத்தி விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் பிரதான நிகழ்வு  ஜூலை மாதம் முலதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08