உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், அதிக பிடி­யெ­டுப்­பு­களை நழுவ விட்ட அணிகள் பட்­டி­யலில் பாகிஸ்தான் முத­லி­டத்­திலும், இந்­தியா கடைசி இடத்­திலும் இருக்­கி­றது.

இதில் இலங்கை அணியோ இரண்டே இரண்டு பிடி­யெ­டுப்­பு­களை மாத்­தி­ரம்தான் நழு­வ­விட்­டுள்­ளது.

நடப்பு உலகக் கிண்­ணத்தில் இது­வை­ரியல் 31 போட்­டிகள் முடிவடைந்­துள்­ளது. இதில் மோச­மான களத்­த­டுப்பு என்ற வகையில் அதிக பிடி­களை நழுவ  விட்ட அணி­களின் பட்­டியல் வெளி­யா­கி­யுள்­ளது. 

அந்த பட்­டி­யலை ஐ.சி.சி. வெளி­யிட்­டி­ருக்­கி­றது. அதில் பாகிஸ்தான் முத­லி­டத்தில் இருக்­கி­றது. 

அந்த அணி இது­வரை மொத்தம் கிடைத்த 26 பிடி­களில் 14 பிடிகளை கோட்டை விட்­டுள்­ளது. 

மொத்­த­மாக பார்த்தால் அடிப்­ப­டையில் இது 35 சத­வி­கி­த­மாகும். இங்­கி­லாந்தோ மொத்தம் கிடைத்த 42 பிடி­களில் 10 பிடி­களை கோட்டை விட்­டி­ருக்­கி­றது. 

தென்­னா­பி­ரிக்கா, நியூ­ஸி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, இலங்கை, பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் மேற்­கிந்­திய தீவுகள் ஆகிய அணிகள் பட்­டி­யலின் அடுத்­த­டுத்த இடங்களில் உள்ளது. இலங்கை அணி 15 பிடியெடுப்புகளில் இரண்டை மட்டுமே கோட்டைவிட்டுள்ளது.