சிகிரியா குன்றைப் பார்வையிடச் சென்றோர் மீது  கருங்குளவிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில்  13 ஆண்களும்  6 பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

பாதிக்கப்பட்டவர்கள் கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன் கடும் பாதிப்பிற்குள்ளான இருவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.