சீனர்­களால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள செயற்கை சூரி­யனை ஒளிர வைக்கும் முயற்­சியில் சீன விஞ்­ஞா­னிகள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

கடந்த 1999ஆம் ஆண்டு முதல், செயற்கை சூரியன் என்று அழைக்­கப்­படும், சோத­னை ­ரீ­தி­யாக மேம்­ப­டுத்­திய 'மீள்­க­டத்தி டோக்­காமாக்' என்ற இயந்­தி­ரத்தை உரு­வாக்கும் பணியில் சீனா ஈடு­பட்டு வரு­கி­றது.

அணுக்­கரு இணைவு மூலம் சூரிய சக்தி உரு­வா­வ­து­போல, இந்த இயந்­தி­ரத்தில் செயற்­கை­யாக சூரி­ய­சக்­தியை உரு­வாக்க முடியும்.

இதற்­கான மீள்­க­டத்திப் பொருட்­களை அமெ­ரிக்கா சீனா­விற்கு வழங்­கு­வ­தாகக் கூறி­யி­ருந்தும் பின்னர் பின்­வாங்­கி­யது. இத­னை­ய­டுத்து சீன விஞ்­ஞா­னி­களே சில ஆண்­டு­கால முயற்­சிக்குப் பின்னர், தரம் வாய்ந்த மீள்­க­டத்திப் பொருட்­களை உரு­வாக்­கி­யுள்­ளனர். அவை தற்­போது அந்த இயந்­தி­ரத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த இயந்­தி­ர­மா­னது 2025ஆம் ஆண்­டுக்குள் முழு­மை­யாகத் தயா­ரா­கி­விடும் என்றும், 2050ஆம் ஆண்டு முதல் தொழில்முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.