ட்ரம்பின் வர்த்தகப் போருக்கு எதிராகக் கூட்டு முன்னணி அமைக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, இந்தியா

Published By: Priyatharshan

24 Jun, 2019 | 03:30 PM
image

அமெரிக்காவிடமிருந்து வருகின்ற வர்த்தக தற்காப்பு 'எதிர்க்காற்றுக்கு" முகங்கொடுக்கும் முயற்சியாக ஜப்பானின் ஒசாகா நகரில் தங்களுக்கிடையில் இரண்டாவது முத்தரப்பு சந்திப்பைஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் நடத்தவிருப்பதை சீனா திங்கட்கிழமை உறுதிசெய்தது.

ஒசாகாவில் ஜுன் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் இருநாள் ஜி-20 உச்சிமாநாடு தொடர்பாக விளக்கமளிப்பதற்காகக் கூட்டப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் இதைத் தெரிவித்த உதவி வெளியுறவு அமைச்சர் ஷாங் யுன், ஏற்கனவே கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செகில் ஷங்காய் ஒத்துழைப்பின் உச்சிமாநாட்டின் போது சந்தித்து தங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்திய இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் ஜப்பானில் நடத்தவிருக்கும் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உயர்மட்ட முத்தரப்புப் பொறிமுறை 'றிக்" என்று இப்போது நிறுவனமயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சீன உதவி வெளியுறவு அமைச்சர் அறிகுறி காட்டினார்.

'ஒசாகா ஜி-20 உச்சிமாநாட்டின் போது சீனா, ரஷ்யா, இந்தியாவின் தலைவர்கள் முத்தரப்புச் சந்திப்பொன்றை நடத்துவார்கள். இந்த முத்தரப்புப் பொறிமுறை முழுநிறைவாக வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

'கடந்த வருடம் ஆர்ஜென்டீனாவின் தலைநகர் புவனஸ் அயர்ஸில் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற்ற போது இந்த மூன்று தலைவர்களும் தங்களுக்குள் சந்திப்பொன்றை நடத்தினார்கள். இத்தடவை தற்போதைய சர்வதேச நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அவர்களுக்கிடையிலான ஒசாகா சந்திப்பு பெரும் முக்கியத்துவமுடையதாக அமைகிறது" என்று முத்தரப்பு உச்சிமாநாட்டின் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார முக்கியத்துவம் குறித்து செய்தியாளர்களினால் கேட்கப்பட்ட போது அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் கருத்துக் கூறிய ஷாங் யுன், ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சர்வதேச சமூகம் ஒருதலைப்பட்சவாதம், வர்த்தகத் தற்பாதுகாப்பு மற்றும் வலுச்சண்டைத்தனமான நடைமுறைகள் ஆகியவற்றின் விளைவுகளை சர்வதேச சமூகம் முழுமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இதே செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சீன பிரதி வர்த்தக அமைச்சர் வாங் ஷோவென் வாஷிங்டனின் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகையில், 'தனிப்பட்ட ஒரு நாடு ஒருதலைப்பட்சவாதம், வர்த்தகத் தற்காப்புவாதம் ஆகியவற்றை வலியுறுத்திக்கொண்டு வர்த்தகப் பங்காளிகள் மீது கடுமையான வரிகளை விதிக்கிறது. அதனால் உலக வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

கீழ்த்திசை பொருளாதார மன்றம்

இந்த மூன்று தலைவர்களும் மீண்டும் எதிர்வரும் செப்டெம்பரில் ரஷ்யாவின் விளாடிவோஸ்டொக் நகரில் நடைபெறவிருக்கும் கீழ்த்திசை பொருளாதார மன்றத்தின் கூட்டத்தின் போதும் தங்களுக்கிடையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அந்த மன்றத்தின் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் மோடி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஒசாகாவில் நடைபெறவுள்ள முத்தர்பபு மாநாடு யுரேஸியாவின் உலகலாவிய முக்கியத்துவத்திற்கு கனதியை சேர்ப்பதற்குப் புறம்பாக இருதரப்பு உறவுகளிலும் நேர்மறையான தாக்கத்தை செலுத்தும் என்று ஷாங் யுன் கூறினார்.

 'இந்தியாவுடனும், ரஷ்யாவுடனுமான சீனாவின் உறவுகள் முழுநிறைவான உந்துவிசையுடன் வளர்ச்சியைக் காண்பிக்கின்றன. மூன்று நாடுகளின் தலைவர்களும் கூட நெருக்கமான பரிமாற்றங்களைப் பேணிவந்திருக்கிறார்கள். அண்மையில் முடிவடைந்த ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிலும், ஆசியாவில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்பாடல் உச்சிமாநாட்டிலும் மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றிய வேறு கூட்டங்களிலும் பிரதானமான உலகப் பிரச்சினைகள் தொடர்பில் ஒத்துழைத்துச் செயற்பட்டு பலதரப்பு வாதத்தைக் கூட்டாக மேம்படுத்துவதற்கான செயன்முறைகளைப் பலப்படுத்தியிருக்கிறார்கள். வர்த்தகத் தற்காப்புவாதத்தை எதிர்த்து பல்தரப்பு ஒத்துழைப்பை அழமாக்கி, உலக சமாதானத்திற்கு முக்கியமான பய்ஙகளிப்பைச் செய்திருக்கிறார்கள்.

ஒசாகா ஒத்துழைப்பு மாநாடும் இருதரப்பு மட்டத்திலான உறவுகளைப் பலப்படுத்தி நேர்மறையான விளைவுகளைக் கொண்டுவரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13