(செ.தேன்மொழி)

களுத்துறை வைத்தியசாலையின் வைத்தியர்களையும் மக்களையும் தாக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி களுத்துறை மாவட்ட அரச வைத்தியர்கள் அனைவரும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவிற்கு எதிராக வைத்திய சங்கத்தினரால் கொண்டுவரப்பட்டிருக்கும் எதிர்ப்பு மாஜரில் மக்களின் கையொப்பங்களை பெற்றுக் கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை களுத்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரே வைத்தியர்களை அச்சுறுத்தியதாக அரச வைத்திய சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

அவர்களுக்கு எதிராக பொலிஸார் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி களுத்துறை மாவட்டத்தில் அனைத்து அரச வைத்தியர்களும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுப்படுவதாக அரச வைத்திய சங்கம் மேலும் தெரிவித்தது. 

களுத்துறை வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிபுறக்கணிப்புக்கு  பாணந்துறை மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் ஆதரவு வழங்கி  பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.