எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நெல்லின் விலை அதிகரிக்கப்படும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

நெல் உற்பத்திக்கான செலவு அதிகரித்திருப்பதனால், உறுதி செய்யப்பட்ட விலையில் மாற்றத்தை மேற்கொள்வது முக்கியமானது. முதன் முறையாக அரிசியின் விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மஹவிலச்சியில் நீர்ப்பாசன வேலைத்திட்டத்திற்கு உட்பட்ட விவசாயப் பாதை மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் விவசாயிகளைத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையிலே இவ்விடயங்களை குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு அனுராதபுரம் மஹவிலச்சி ஸ்ரீ சுதர்சனாராமய விஹாரையில் இடம்பெற்றது.