பிரதேச சபை நிருவாக அதிகாரியைத்  தாக்கியமை குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹல்துமுள்ளை பிரதேச செயலாளர் சமில இந்திக்க ஜயசிங்க சரீரப் பிணையில் விடப்பட்டதுடன் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

பண்டாரவளை நீதவான்  நீதிபதி கீர்த்தி வெலெகும்பர முன்னிலையில்  கைது செய்யப்பட்ட ஹல்துமுள்ளை பிரதேச செயலாளர் இன்று ஆஜர் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிபதி அவரை ஐயாயிரம் ரூபாவுக்கான இரு சரீரப்பிணைகளில் விடுவித்ததுடன் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீளவும்  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

குறித்த பிரதேச செயலாளர் ஹல்துமுள்ளை பிரதேச சபை நிருவாக அதிகாரியின் வீட்டிற்குச் சென்று அங்கு இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து பிரதேச செயலாளர் பிரதேச சபை நிருவாக அதிகாரியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் காயமுற்ற பிரதேச சபை நிருவாக அதிகாரி ஹல்துமுள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.