“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”

Published By: Digital Desk 3

24 Jun, 2019 | 02:46 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதிவிடும் பேஸ்புக், யூ டியுப் சமூகவலைத்தளங்களை முடக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத்தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை மாற்றியமைத்து அரசாங்கத்திற்கு சாதகமான பின்னணியொன்றை உருவாக்கிக் கொள்ளும் வகையில் சமூகவலைத்தளங்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதிவிடும் நபர்களின் தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகள் மற்றும் யூ டியுப்பை மையமாகக் கொண்டியங்கும் செய்தி ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில வாரகாலமாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனை ஆராய்ந்து பார்த்ததிலிருந்து முடக்கப்பட்ட, சைபர் தாக்குதலுக்கு உள்ளான பேஸ்புக் கணக்குகள் என்பன ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்ச்சித்தமை வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவனம் தற்போது அரசியல் செல்வாக்குகளின் அடிப்படையிலலேயே செயற்பட்டு வருகின்றது. அதேபோன்று பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் பக்கச்சார்பான மொழிபெயர்ப்புப் பணியாளர்களும் தவறான புரிதலினாலும் இவ்வாறு பலரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.

இதனூடாக அதிகளவிலானோர் பயன்படுத்தும் பேஸ்புக் மற்றும் யூ டியுப் ஆகிய சமூக வலைத்தளங்களை எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு சாதகமான முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2015 இல் முந்தைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பிரசாரங்களை இந்த சமூகவலைத்தளங்களில் ஊடாக முன்னெடுத்த இளைஞர், யுவதிகளுக்கு இலவல வை-பை மற்றும் கூகுள் பலூன் வசதிகளை வழங்குவதாக உறுதியளித்த இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத்தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளமை குறித்து நாம் எமது கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறோம்.

அதேபோன்று நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை மாற்றியமைத்து அரசாங்கத்திற்கு சாதகமான பின்னணியொன்றை உருவாக்கிக் கொள்வதுடன், எதிரணியின் கொள்கைகளை பின்தள்ளும் வகையில் சமூகவலைத்தளங்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது குறித்து பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35