(செ.தேன்மொழி)

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உயிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  இடைகால மனு மீதான விசாரணை குறித்த எதிர்வரும் ஜூலை மாதம் 31 திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவீர , எல். டீ. பி.தெஹிதெனிய மற்றும் எஸ். துரை ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட போதே அவர்கள் இந்த வழக்கு விசாரணைகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டு ஒத்தி வைத்துள்ளனர்.

கடந்த ஏப்பரல் மாதல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவல்கள் கிடைக்கப் பெற்றும் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என்பது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியால்  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். 

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டு , இதனால் அடிப்டை உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாவும், தன்னை பதவியிலிருந்து நீக்க வேண்டாம் என குறிப்பிட்டும் பொலிஸ் மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்தார். மே மாதம் 29 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டள்ளது.